உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / வாலிபர்கள் மீது தீவைத்த சம்பவம் வழக்கில் மேலும் ஒருவர் கைது

வாலிபர்கள் மீது தீவைத்த சம்பவம் வழக்கில் மேலும் ஒருவர் கைது

நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம், நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜயகணபதி, 22, தமிழரசன், 22. இருவரும், கடந்த 16ம் தேதி திருமால்பூர், விருகசீர நதி பாலம் அருகே, தங்கள் நண்பர்களான சங்கர் மற்றும் மணிகண்டனுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திருமால்பூர் காலனி பகுதியை சேர்ந்த பிரேம்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட மூவர் வந்து, தமிழரசனிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த தருணத்தில், சங்கர் தன் இருசக்கர வாகனத்திற்காக வாட்டர் பாட்டிலில் வாங்கி கையில் வைத்திருந்த பெட்ரோலை பிடுங்கி, தமிழரசன் மீது ஊற்றிய பிரேம்குமார், அவரை தீயிட்டு எரிக்க முற்பட்டார். இதில், தமிழரசனை காப்பாற்ற முற்பட்ட விஜயகணபதி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிந்த போலீசார், பிரேம்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். வெங்கடேசனை நேற்று கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இந்த தீவைப்பு சம்பவம், ஜாதி ரீதியாகவும், கலவரம் ஏற்படுத்தும் நோக்கிலும் நடைபெறவில்லை என, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், தேடப்படும் நபர் பற்றிய விபரத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டது. அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், 'நெல்வாய் கிராமத்தில் நடந்த மோதல் சம்பவத்திற்கும், தங்கள் கட்சிக்கும் தொடர்பு இல்லை என, கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

udayanan
ஜன 19, 2025 11:51

இதே சம்பவத்தில் ஒருவேளை பாதிக்கப்பட்ட நபர்கள் பட்டியலினமாக இருந்திருந்தால் அனைத்து ஊடகமும் தனிப்பட்ட பிரச்சினையாக எழுதாமல், ஜாதி ரீதியான தாக்குதல் என்றெழுதி ஒரு வார காலம் ஊடக விவவாதம் நடந்துகிட்டு.