உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / அரக்கோணம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

அரக்கோணம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன், புதிய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார், 30. இவர் அரக்கோணம் டவுன் பகுதியில் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.அரக்கோணம் டவுன் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., விவேகானந்த சுக்லா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். சசிக்குமாரை ஒராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்திரகலா நேற்று உத்தரவிட்டார்.இதையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை