பக்தர்கள் தங்கும் விடுதி சுற்றுச்சுவர் சோளிங்களில் சேதம்
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது அமிர்தவல்லி தாயார் உடனுறை யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த கோவிலின் எதிரே சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.யோக நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை அமைந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள், இந்த தலத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மலையேறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், பக்தர்களின் பங்களிப்புடன், இங்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது.நபர் ஒருவருக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினசரி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ரோப்கார் வாயிலாக சுவாமி பயணித்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில், யோக நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக, மலையடிவாரத்தில் தேவஸ்தான அலுவலகம் அருகே, பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளது.இந்த விடுதியின் சுற்றுச்சுவர் மற்றும் வாயிற்கதவு இடிந்து சேதம் அடைந்துள்ளது. அவற்றை அகற்றவும், சீரமைக்கவும், ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.