உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / காவல் நிலைய பெயர் பலகை மாயமானதால் பக்தர்கள் அவதி

காவல் நிலைய பெயர் பலகை மாயமானதால் பக்தர்கள் அவதி

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலுக்கு, நாடு முழுதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்தாண்டு முதல் மலைக்கோவிலுக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது, பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக கொண்டபாளையம் மாறியுள்ளது. ரோப்காரில் பயணித்து சுவாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள், கொண்டபாளையத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி, அதன்பின் சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.கொண்டபாளையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையில், காவல் நிலைய தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை இருந்தது. சமீபகாலமாக, அந்த அறிவிப்பு பலகையை காணவில்லை.இதனால், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டபாளையத்திற்கு வரும் பக்தர்கள், அவசர காலத்தில் போலீசாரை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையம் செல்லும் வழியிலும் வழிகாட்டி பலகை இல்லை.இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கொண்டபாளையத்தில் அவசர நேரத்தில் போலீசாரை தொடர்பு கொள்ள முடிவது இல்லை. மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையில், காவல் நிலைய தொடர்பு எண்கள் மற்றும் காவல் நிலைய சாலையில் வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை