உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / வாலிபரை கொன்ற போதை கும்பல்: எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

வாலிபரை கொன்ற போதை கும்பல்: எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

நெமிலி:நெமிலி அருகே நேற்று, கஞ்சா போதை கும்பல், வாலிபரை கத்தியால் வெட்டி கொன்ற விவகாரத்தில், புகார் அளித்தும் முன்பே நடவடிக்கை எடுக்காத எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவரை, ராணிப்பேட்டை எஸ்.பி., 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்திற்கு கடந்த, 19ம் தேதி, கஞ்சா போதையில் சென்ற உளியநல்லுாரை சேர்ந்த, ஐந்து பேர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அக்கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை பாட்டு பாடி, நடனமாட கூறினர். அவர் ஆத்திரத்தில் சத்தம் போட்டதால், அங்கு கிராம மக்கள் கூடினர். இதனால், அக்கும்பல் காரில் தப்பியது.இது குறித்து கிராம மக்கள், நெமிலி போலீசில் அன்றைய தினமே புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற எஸ்.எஸ்.ஐ., தனசேகர் மற்றும் காவலர் குமார் விசாரணை ஏதும் நடத்தவில்லை.இந்நிலையில், கஞ்சா போதையில், அதே ஐந்து பேர் கும்பல் நேற்று காலை, 8:00 மணிக்கு வேட்டாங்குளம் கிராமத்திற்கு வந்தது. அங்கு தட்சிணாமூர்த்தி, 29, என்ற வாலிபர் தன் விவசாய நிலத்திற்கு பைக்கில் சென்றபோது அவரை வழிமறித்து, கத்தியால் வெட்டி கொலை செய்து தப்பியது.ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், வாலிபரின் சடலத்துடன் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா சம்பவ இடம் சென்று விசாரித்ததில், புகார் மனுவை பெற்றும் எஸ்.எஸ்.ஐ., தனசேகர் மற்றும் காவலர் குமார் விசாரணை நடத்தாதது தெரிந்தது. இதையடுத்து இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.மேலும், கொலையாளிகளை பிடித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். கொலையாளிகளை நெமிலி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி