குண்டாசில் நால்வர் கைது
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய, அரக்கோணத்தைச் சேர்ந்த மேத்யூடேனியல், 31, விக்னேஷ், 26, நாகராஜ், 25, முகேஷ், 25, ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.நால்வரும் சிறையில் உள்ள நிலையில், இவர்களது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், ராணிப்பேட்டை எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையின்படி, கலெக்டர் சந்திரகலா, நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.அரக்கோணம் டவுன் போலீசார், மேத்யூ டேனியல், விக்னேஷ், நாகராஜ், முகேஷ் உள்ளிட்ட நால்வரிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான கடிதத்தை, வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடம் அளித்தனர்.