உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: சிறுமி பலி

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: சிறுமி பலி

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணிச்சத்திரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், வேலுாரிலிருந்து சென்னையை நோக்கி சென்ற லாரி, திடீரென பிரேக் அடித்தது. இதில், பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி மற்றும் கார் என அடுத்தடுத்து, 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், சென்னையை சேர்ந்த கார்த்திக், 40, தன் குடும்பத்துடன் வேலுார் சென்றுவிட்டு, ஆட்டோவில் சென்னை திரும்பினார். அப்போது இந்த விபத்தில் சிக்கி அவரது மகள் நிஜிதா, 9 பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை