மேலும் செய்திகள்
விலாசம் கேட்பது போல் நடித்து டூ-விலர் திருட்டு
03-Apr-2025
ஆர்.கே.பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கீழ்மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன், 47. இவர், நேற்று சோளிங்கரில் அவரது மருமகன் ரங்கநாதன் வீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை பார்வையிட சென்றார்.பணி முடிந்து வீடு திரும்பும் வழியில், அய்யனேரி கொள்ளாபுரியம்மன் கோவில் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்து வந்த சோளிங்கர் தீயணைப்பு நிலைய வீரர்கள், வரதனை சடலமாக மீட்டனர்.இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், வரதன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும்.
03-Apr-2025