உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / ஷூ கிடங்கில் பயங்கர தீ விபத்து

ஷூ கிடங்கில் பயங்கர தீ விபத்து

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், ஷூ கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 7 ஆயிரம் ஷூக்கள் எரிந்து சேதமானது. ராணிப்பேட்டை, சுந்தரம் தெருவில் இம்மானுவேல் ராபர்ட் பால், 34, என்பவருக்கு சொந்தமான ஷூ கிடங்கு உள்ளன. இங்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷூக்கள் இருப்பு இருந்தன. நேற்று முன்தினம் இரவு, இக்கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்தில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரம் ஷூக்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ