உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / அண்ணனை மயங்க வைத்து பிஞ்சிடம் மீறல்

அண்ணனை மயங்க வைத்து பிஞ்சிடம் மீறல்

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே ஒரு நடுநிலைப்பள்ளியில், நேற்று முன்தினம் மதியம், ஒன் றாம் வகுப்பு படிக்கும், 5 வயது மாணவியும், அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும், 9 வயது அண்ணனும், மதிய உணவு இடைவேளையில் வளாகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவன் அங்கு வந்து, மாணவன், மாணவி முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்தான். இதில் சிறுமியின் அண்ணன் மயங்கி விட, அவனது தங்கையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டான். அப்பகுதியில் விளையாடச் சென்ற சில மாணவர்கள் இதை பார்த்தபோது, அந்த சில்மிஷ மாணவன் ஓட்டம் பிடித்தான்.இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலகம், வட்டாரக் கல்வி அதிகாரி, நெமிலி போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. தப்பிய மாணவனை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை