உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மின்சாரம் தாக்கி பள்ளி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி பள்ளி சிறுவன் பலி

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் விண்டர்பேட்டையை சேர்ந்தவர் சபீர் மகன் ரிஸ்வான், 12. இவர் திருத்தணி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் பாத்ரூமில் கை கழுவ சென்றார்.பாத்ரூமில் உள்ள சுவிட்ச் பாக்ஸ் அருகே தொட்டபோது, மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார். ரிஷ்வானின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த பெற்றோர், அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாசில்தார் ஸ்ரீதேவி, மற்றும் அரக்கோணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ