சோளிங்கர் ரோப்கார் சேவை இன்று காலை ரத்து
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்து உள்ளது யோகநரசிம்ம சுவாமி மலைக்கோவில். 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த மலைக்கோவிலுக்கு, கடந்த மார்ச் மாதம், ரோப்கார் சேவை ஏற்படுத்தப்பட்டது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சேவை வாயிலாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ரோப்கார் வளாகத்தில் இன்று (செப்.,27) காலை தேசிய பேரிடர் மீட்பு படையினர், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இதனால், காலை முதல் மதியம் வரை ரோப்கார் சேவை இயங்காது. அதன்பின், வழக்கம் போல், ரோப்கார் இயங்கும். இந்த தகவலை அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.