உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / ரயிலில் பெண்ணை தாக்கி 10 சவரன் நகை பறிப்பு

ரயிலில் பெண்ணை தாக்கி 10 சவரன் நகை பறிப்பு

அரக்கோணம்: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்துாரை சேர்ந்தவர் திலகம், 47; செங்கல்பட்டில் இருந்து அரக்கோணத்திலுள்ள தாய் வீட்டிற்கு, பயணியர் ரயிலில் நேற்று சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் - மேல்பாக்கம் இடையே சிக்னலுக்கு, காலை, ௯:௦௦ மணிக்கு ரயில் நின்றது. பெட்டியில் திலகம் மட்டுமே இருந்த நிலையில், நோட்டமிட்ட ஒரு வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி, அவரை தாக்கியுள்ளார். திலகத்துக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. அவர் அணிந்திருந்த, 10 சவரன் நகையை பறித்துக்கொண்டு, அந்த வாலிபர் ஏரிக்கரையில் இறங்கி ஓடியுள்ளார். திலகத்தின் சத்தம் கேட்டு ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த ஆசாமியை விரட்டினர். ஆனால், ஆசாமி தலைமறைவாகி விட்டார். அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ