உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / கணவன், குழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள்

கணவன், குழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள்

ராணிப்பேட்டை,:ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடை அடுத்த தாஜ்புராவை சேர்ந்தவர் ராஜா, 32. எலக்ட்ரீஷியனான இவரது காதல் மனைவி தீபிகா, 24, தம்பதியின் 1 வயது மகன் பிரனீஸ்வரன். கடந்த 2019 மே 17ல் கணவன், மகனை காணவில்லை என, ஆற்காடு தாலுகா போலீசில் தீபிகா புகார் செய்தார்.போலீசார் விசாரணையில், தீபிகாவுக்கும், ராஜாவின் நண்பரான ஜெயராஜ், 29, என்பவருக்கும் முறைகேடான தொடர்பு இருந்தது தெரிந்தது. அதற்கு இடையூறாக இருந்த கணவன், மகனை கொலை செய்து, சாத்துார் ஏரிக்கரையில் புதைத்ததும் தெரிந்தது. ஆற்காடு தாலுகா போலீசார், தீபிகாவை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார். தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaran
டிச 09, 2024 20:58

தூக்கில் போட வேண்டும் .. அப்போதான் இது போன்ற குற்றங்கள் குறையும் .. எங்கே பெண்ணிய வாதிகள் ?.. இது எல்லாத்துக்கும் காரணம் பெண் சுதந்திரம் பற்றிய பேச்சுதான் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை