உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாமாங்கம் - ஊத்துக்கிணறு இடையே இணைப்பு பாலம்மத்திய அமைச்சரிடம் பா.ம.க., - எம்.எல்.ஏ., கோரிக்கை

மாமாங்கம் - ஊத்துக்கிணறு இடையே இணைப்பு பாலம்மத்திய அமைச்சரிடம் பா.ம.க., - எம்.எல்.ஏ., கோரிக்கை

மாமாங்கம் - ஊத்துக்கிணறு இடையே இணைப்பு பாலம்மத்திய அமைச்சரிடம் பா.ம.க., - எம்.எல்.ஏ., கோரிக்கைசேலம்:பா.ம.க., தலைவர் அன்புமணியுடன், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், மத்திய சாலை, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை, டில்லியில் சந்தித்தார். அப்போது, வெள்ளி தொழிலுக்கு புகழ்பெற்ற சேலம் மாவட்டத்தை குறிக்கும்படி, வெள்ளி கால் கொலுசை, நினைவு பரிசாக வழங்கினார்.தொடர்ந்து அவர் அளித்த மனு: சேலம் மேற்கு தொகுதி, மாமாங்கத்தில், மேம்பாலம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. அதன் சுற்றுப்பகுதிகளில், 25,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும்(எஸ்.ஏ.ஐ.எல்.,) ரெப்ராக்டரிஸ் காலனி, பழமையான ராமர் பாத கோவில், பெரிய மாரியம்மன், தேவாலயம், தனியார் கல்லுாரி உள்ளன. இதனால் மக்கள், மாணவ, மாணவியர், பக்தர்கள் நலன் கருதி, மாமாங்கம் - ஊத்துக்கிணறு இடையே சிறு இணைப்பு பாலம்(பி.யு.பி.,) அமைத்து உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து அமைச்சர், 'அங்கே இணைப்பு பாலம் கட்டித்தரப்படும்' என, உறுதி அளித்தார். மேலும் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்கு மேற்கூரை அமைக்கவும், மேலும் ஒரு மனு வழங்கினார். அதற்கும் அமைச்சர் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதனால், பா.ம.க., தலைவரான, எம்.பி., அன்புமணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !