மேலும் செய்திகள்
பட்டா வழங்க கோரி சப்--கலெக்டரிடம் மனு
28-Jan-2025
கலெக்டர் வாகனத்தை முற்றுகையிட்டு பட்டா கேட்டு மனு அளித்த மக்கள்ஆத்துார்:ஆத்துார் அருகே புங்கவாடியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதற்கு காலை, 11:40 மணிக்கு, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மஞ்சினி ஆரம்ப சுகாதார நிலையம் வழியே காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மஞ்சினியை சேர்ந்த, ஆதிதிராவிட சமுதாய மக்கள், கலெக்டர் வாகனத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், பிரச்னை குறித்து, கலெக்டர் கேட்டார்.மக்கள், '1985ல், நான்கரை ஏக்கர் நிலம், ஆதிதிராவிடர் சமுதாயத்தினர், 61 பேருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அந்த இடத்தை பார்வையிட்டு பட்டா வழங்க வேண்டும்' என்றனர். தொடர்ந்து அது தொடர்பான மனுக்களை, கலெக்டரிடம் வழங்கினர். அதற்கு அவர், 'சம்பந்தப்பட்ட இடத்தை பார்த்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.
28-Jan-2025