உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துர்நாற்றம் வீசும் குளம் பெண் பக்தர்கள் அவதி

துர்நாற்றம் வீசும் குளம் பெண் பக்தர்கள் அவதி

துர்நாற்றம் வீசும் குளம் பெண் பக்தர்கள் அவதிமகுடஞ்சாவடி : இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அக்கோவில் முன்புறம், பெண்கள் குளிக்க தனியே குளம் உள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத படி மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆண்கள் குளிக்கும் கிணறுகளில், பெண்கள் குளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பராமரிப்பின்றி உள்ள குளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெண் பக்தர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை