உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துாரில் அனுமதியற்ற எட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ஆத்துாரில் அனுமதியற்ற எட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ஆத்துாரில் அனுமதியற்ற எட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்புஆத்துார், :ஆத்துாரில், அனுமதியற்ற எட்டு குடிநீர் இணைப்புகளை, நகராட்சி அலுவலர்கள் துண்டிப்பு செய்தனர்.ஆத்துார் நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளில், 12 ஆயிரத்து, 250 காவிரி குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்பு மூலம், 4.32 கோடி ரூபாய் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இதில், 1.48 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்ட நிலையில், பல மாதங்களாக குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளதால், 2 கோடியே, 83 லட்சத்து, 72 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை உள்ளது. இந்த குடிநீர் இணைப்புகளில், நிலுவை தொகை வசூல் செய்யும் பணிகளில், நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும், அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. நேற்று, நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் தலைமையிலான குடிநீர் பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, புதுப்பேட்டை, தட்டான்சாவடி பகுதியில் அனுமதியற்ற எட்டு குடிநீர் இணைப்புகள் கண்டறிந்து அவற்றை துண்டிப்பு செய்தனர்.இதுகுறித்து, நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படுகிறது. இதுபோன்ற குடிநீர் இணைப்பு இருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ