வீடு புகுந்து அத்துமீற முயற்சிபொக்லைன் ஆப்பரேட்டர் கைது
வீடு புகுந்து அத்துமீற முயற்சிபொக்லைன் ஆப்பரேட்டர் கைதுமேட்டூர், :கொளத்துார், செட்டியூர் அடுத்த நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த, பொக்லைன் ஆப்பரேட்டர் அபி ேஷக், 22. இவர் நேற்று முன்தினம் இரவு மது அருந்தினார். தொடர்ந்து வீடு அருகே உள்ள மற்றொரு வீட்டில் புகுந்த அபிேஷக், அங்கு துாங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். பெண், கணவரை அழைத்து கூச்சலிட்டார். உடனே அபிேஷக், அவரது மொபைல், பைக்கை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பெண் புகார்படி, கொளத்துார் போலீசார், நேற்று அபிேஷக்கை கைது செய்தனர்.