உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உடை மாற்ற அறை இல்லைபெண் பக்தர்கள் வேதனை

உடை மாற்ற அறை இல்லைபெண் பக்தர்கள் வேதனை

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு பக்தர்கள் குளிக்க, 7 கிணறுகள் உள்ளன.அங்கு குளிக்கும் பெண்கள் உடை மாற்ற அறை இல்லை. காரில் வரும் பெண்கள், கிணற்றில் குளித்துவிட்டு காரில் சென்று உடை மாற்றுகின்றனர். மற்றவர்கள், உடை மாற்ற சிரமப்படுகின்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெண் பக்தர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ