உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எம்.எல்.ஏ., எதிர்ப்பு

ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எம்.எல்.ஏ., எதிர்ப்பு

ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எம்.எல்.ஏ., எதிர்ப்புசேலம்: வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட எருமாபாளையம், சன்னியாசிகுண்டு, அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சிகளை, சேலம் மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, அத்தொகுதி எம்.எல்.ஏ., ராஜமுத்து, மக்களுடன் வந்து, நேற்று, கலெக்டர் பிருந்தாதேவியிடம் மனு அளித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:தொகுதிக்கு உட்பட்ட, 3 ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைப்பது குறித்து, எம்.எல்.ஏ., என்ற முறையில், எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. வாய்மொழி உத்தரவு கூட பிறப்பிக்காமல், 3 ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் அங்கு வாழக்கூடிய ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வீடு, குடிநீர், குப்பை, சொத்து வரிகள் என, அனைத்தும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அரசாங்கம், மக்களை காக்க வேண்டும். இப்போதுள்ள அரசு, மக்களை வஞ்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ