உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில கிரிக்கெட் போட்டி சேலம் அணி வெற்றி

மாநில கிரிக்கெட் போட்டி சேலம் அணி வெற்றி

மாநில கிரிக்கெட் போட்டி சேலம் அணி வெற்றிசேலம்: தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், 2024 - 25ம் ஆண்டுக்கு, மகளிர் மூத்தோர் மாநில கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. முதல் சுற்று போட்டி, கிருஷ்ணகிரியில் நடந்தது. அதில் சேலம் மாவட்ட மகளிர் அணி, இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், இரண்டாம் சுற்று போட்டியில், சேலம் - பெரம்பலுார் அணிகள் மோதிய போட்டி, சேலம், சூரமங்கலத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பெரம்பலுார் அணி, 40 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு, 83 ரன்கள் எடுத்தன. அடுத்து விளையாடிய சேலம் அணி, வெறும், 9.3 ஓவரில், 2 விக்கெட் இழப்புக்கு, 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் சேலம் அணி வரும், 11ல், சென்னையில் நடக்க உள்ள அடுத்தகட்ட போட்டியில் ராணிபேட்டை அணியை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக, போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி தொடங்கி வைத்தார். இதில், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரகாஷ், துணைத்தலைவர் திவான், செயலர் பாபுகுமார், பொருளாளர் ஜெயராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை