உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.கே.எஸ்., மருத்துவமனைமருத்துவர் எழுதிய நுால் வெளியீடு

எஸ்.கே.எஸ்., மருத்துவமனைமருத்துவர் எழுதிய நுால் வெளியீடு

எஸ்.கே.எஸ்., மருத்துவமனைமருத்துவர் எழுதிய நுால் வெளியீடுசேலம்:சேலம், எஸ்.கே.எஸ்., மருத்துவமனை, முதுகலை மருத்துவ கல்வி நிறுவனம், சமீபத்தில் ஒரு தொடர் மருத்துவ கல்வி(சி.எம்.இ.,) நிகழ்வை நடத்தியது. வாஸ்குலர், எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை துறை ஏற்பாடு செய்த நிகழ்வில், 140க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.அதில், எஸ்.கே.எஸ்., மருத்துவமனை வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜா எழுதிய, 'வாஸ்குலர் அப்டேட்ஸ்: கேஸ் வின்னெட்ஸ் 2023 - 2024' எனும் நுால் வெளியிடப்பட்டது. எஸ்.கே.எஸ்., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுரேஷ் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சேலத்தின் முன்னோடி மூத்த வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் அருள்மணி, புத்தகத்தை வெளியிட்டார்.தொடர்ந்து நீரிழிவு கால் புண்கள் குறித்து, நாளமில்லா சுரப்பி நிபுணர் செந்தில்ராஜா, வாஸ்குலர் இமேஜிங் குறித்து, ரேடியோலஜிஸ்ட் விஜய் சதாசிவம், புறதமனி அடைப்பு நோய் சிகிச்சை குறித்து ராஜா பேசினர். நுாலில், ராஜாவால் சிகிச்சை அளிக்கப்பட்ட பல்வேறு புற தமனி அடைப்பு நோய்கள் குறித்து சித்தரிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை