உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீ மிதித்து அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்சங்ககிரி:சங்ககிரி, வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா, கடந்த மாதம், 18ல் தொடங்கியது. நேற்று சரஸ்வதி அலங்காரத்தில் சக்தி மாரியம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். பலர், கரகத்துடனும் ஊர்வலமாக வந்தனர். 5 பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி, கோட்டை சாலை, சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட், சேலம் பிரதான சாலை வழியே, கோவிலை அடைந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அதேபோல் ஓமலுார் அருகே கருப்பூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் வளாகத்தை சுற்றி சக்தி கரகம், அக்னி கரக ஊர்வலம் வந்தது. இரவு, 7:30 மணிக்கு தீ மிதி விழா தொடங்கியது. திரளான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஓமலுார் கோட்டை மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். சக்தி கரகம், பூங்கரகம் எடுத்து, கோவிலை வலம் வந்தனர். மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் அம்மன் சிங்க வாகனத்தில், முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை