அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்இந்து முன்னணியினர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்இந்து முன்னணியினர் மீது வழக்குசேலம்திண்டுக்கல்லில் உள்ள கோவிலுக்குள் செல்ல, இந்து முன்னனி மாநில செயலர் செந்தில்குமாரை அனுமதிக்கப்படாததை கண்டித்து நேற்று முன்தினம் இந்து முன்னணியினர், சேலம், கோட்டை மைதானத்தில் மண்டல தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், 31 பேரை கைது செய்த போலீசார், அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்து இரவில் விடுவித்தனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., முத்துலட்சுமி புகார்படி, சேலம் டவுன் போலீசார், சந்தோஷ்குமார், சேலம் மாவட்ட செயலர்கள் கண்ணன், சுரேஷ், பா.ஜ., மாவட்ட செயலர் கண்ணன் உள்பட, 31 பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிந்தனர்.