எந்த இடங்களில் முதல்வர் மருந்தகம்விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு
எந்த இடங்களில் முதல்வர் மருந்தகம்விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவுசேலம்சேலம் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகங்களை ஆய்வு செய்த பின், கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் 16, தொழில் முனைவோர் மூலம், 16 என, 32 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் குறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகள், 20 முதல், 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும், பிற மருந்துகள், 25 சதவீத தள்ளுபடி விலையிலும் விற்கப்படுகின்றன. குறிப்பாக நீரிழிவு நோய்க்கான, 'மெட்பார்மின்' மாத்திரை, தனியாரில், 70 ரூபாய் எனில், முதல்வர் மருந்தகத்தில், 11 ரூபாய்க்கு கிடைக்கிறது. முதல்வர் மருந்தகம் தொடங்கி, 13 நாட்களில் மாவட்டத்தில், 1.15 லட்சம் ரூபாய் மதிப்பில் மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டுள்ளன. தேவைப்படும் நோயாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். எந்தெந்த இடங்களில் முதல்வர் மருந்தகம் செயல்படுகிறது என்பதை, மக்கள் தெரிந்துகொள்ளும்படி, விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.