உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹூப்ளி ரயில் ரத்து அறிவிப்பில் மாற்றம்

ஹூப்ளி ரயில் ரத்து அறிவிப்பில் மாற்றம்

ஹூப்ளி ரயில் ரத்து அறிவிப்பில் மாற்றம்சேலம்:கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் சனி காலை, 6:50க்கு புறப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு வார ரயில், மறுநாள் காலை, 6:15 மணிக்கு ராமேஸ்வரத்தை அடையும். மறுமார்க்கத்தில் ஞாயிறு இரவு, 9:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு, 7:25 மணிக்கு ஹூப்ளியை அடையும். இந்த ரயில், மார்ச், 22 முதல், ஏப்., 27 வரை, 6 வாரங்கள் ரத்து செய்யப்படுவதாக, அறிவித்திருந்தது. இந்த ரயில், ஏப்., 12, 19, 26, ராமேஸ்வரம் - ஹூப்ளி வார ரயில், ஏப்., 13, 20, 27 ஆகிய நாட்கள் என, 3 வாரங்கள் வழக்கம்போல் இயங்கும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஊட்டி மலை ரயில்ஊட்டி மலை ரயில் பாதையில், ஹில்குரோவ் - குன்னுார் இடையே கன மழையால், மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் ரயில் தடத்தில் விழுந்துள்ளன. இதனால் நேற்று காலை, 7:10 மணிக்கு புறப்படவிருந்த, மேட்டுப்பாளையம் - உதக மண்டலம் ரயில், மதியம், 2:00 மணிக்கு கிளம்பவிருந்த உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு செய்த பயணியரின் முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும். பாறை, மண் திட்டுகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என, சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை