உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி இறப்புதொழிலாளி மீது இரட்டை கொலை வழக்கு

மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி இறப்புதொழிலாளி மீது இரட்டை கொலை வழக்கு

மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி இறப்புதொழிலாளி மீது இரட்டை கொலை வழக்குசேலம்:சேலம், கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலகிருஷ்ணன், 65. இவரது மனைவி இந்திரா, 60. இவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் உள்ளதாக, பாலகிருஷ்ணன் கண்டித்து வந்தார். கடந்த பிப்., 13 இரவு, போதையில் வந்த பாலகிருஷ்ணன், கத்தியால் இந்திரா கழுத்தை அறுத்து கொலை செய்தார்.தொடர்ந்து மனைவி யின் தகாத உறவுக்கு துணையாக இருந்ததாக, அருகே வசிக்கும் மாற்றுத்திறனாளி மாரியம்மாள், 67, வீட்டுக்கு சென்றார். அங்கு ஜன்னல் வழியே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். துாங்கிக்கொண்டிருந்த மாரியம்மாள் உடல் கருகிய நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கருப்பூர் போலீசார் விசாரித்து, கொலை வழக்கு பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.இந்நிலையில், மேல் சிகிச்சைக்கு, வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியம்மாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இதனால் பாலகிருஷ்ணன் மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இரட்டை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை