உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலையில் தேங்காய் உடைத்துதிரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்துதிரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்துதிரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்இடைப்பாடி:இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 25ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து கவுண்டம்பட்டியில் உள்ள சரபங்கா ஆற்றில் அலகு குத்திக்கொண்டு, கவுண்டம்பட்டி முழுதும் சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள், மாவிளக்கு தட்டுடன் சென் றனர். அப்போது அந்த தட்டில் உள்ள தேங்காய்களை எடுத்து, சுவாமி சிலை முன் அமர்ந்த திரளான பக்தர்கள் தலையில், பூசாரி உடைத்தார். மேலும் ஒயிலாட்டமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'நிறைவேறாத செயல்களை மனதில் நினைத்து, தலையில் தேங்காய் உடைத்தால் வேண்டுதல் நிறைவேறிவிடும் என்பது ஐதீகம்' என்றனர்.தீ மிதி விழாஇடைப்பாடி, தாவாந்தெரு காளியம்மன் கோவில் திருவிழா ஒட்டி நேற்று தீ மிதி விழா நடந்தது. எலுமிச்சை அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி கார்கள், ஆம்னி வேனை இழுத்து வந்தும், பெண்கள் நாக்கு அலகு குத்தியும் வந்தனர். தொடர்ந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை