உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழாய் போட்டுக்கொடுத்த டவுன் பஞ்.,கோவில் கிணற்றில் விடப்படும் கழிவுநீர்

குழாய் போட்டுக்கொடுத்த டவுன் பஞ்.,கோவில் கிணற்றில் விடப்படும் கழிவுநீர்

குழாய் போட்டுக்கொடுத்த டவுன் பஞ்.,கோவில் கிணற்றில் விடப்படும் கழிவுநீர்ஆட்டையாம்பட்டி:ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா ஆடி மாதத்தில் நடக்கும். அதை ஒட்டி வேப்பமரத்தில் கம்பம் வெட்டி பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு வந்து பூஜை செய்து, கோவில் அருகே பெரியபாவடியில் உள்ள கோவில் கிணற்றில் வைத்த பின் கோவிலில் கம்பத்தை நடுவர். திருவிழா முடிந்ததும், கம்பத்தை அகற்றி ஊர்வலமாக கொண்டு சென்று கிணற்றில் போட்டு விடுவர்.மூன்று ஆண்டுக்கு முன் வேலநத்தத்தில் உள்ள, 20க்கும் மேற்பட்ட வீதிகளில் வெளியேறும் சாக்கடை கழிவுநீர் அதிகளவில் தேங்கும்போது, குழாய் மூலம், அந்த கோவில் கிணற்றில் சேரும்படி, ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் செய்துள்ளது. இதனால், கோவில் புனிதம் கெடுவதாக, பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் கிணற்றில் ஓடும் சாக்கடை குழாயை அகற்றி, 5 அடி துாரத்தில் செல்லும் பிரதான சாக்கடை குழாயை இணைக்க, பக்தர்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மேகநாதனிடம் கேட்டபோது, ''ஆய்வு செய்து கழிவுநீர் கலந்தால் குழாயை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ