மேலும் செய்திகள்
மல்லேஸ்வர கோவிலில் மகா கும்பாபிஷேகம்
04-Mar-2025
ஹிந்து முன்னணி கோரிக்கை
07-Mar-2025
கோவில் புனரமைப்பு பணிக்கு பொது நபரை நியமிக்க கோரிக்கைநாமக்கல்:மோகனுார், என்.புதுப்பட்டி கிராம மக்கள், கலெக்டர் உமாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எங்கள் கிராமத்தில், 1,500 குடும்பத்தினர் வசிக்கிறோம். மூதாதையர் காலத்தில், மாரியம்மன், பிடாரி அம்மன், விநாயகர், பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியாக கோவில் கட்டி சித்திரை மாதம், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடத்தி வந்தோம். 2018ல், திருவிழா நடந்தபோது, மற்றொரு சமூகத்தினரால் பிரச்னை உருவாகி திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட சமூகத்தினர், ஊர் பொதுமக்கள் சம்பதமின்றி, மாரியம்மன் கோவிலை புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டு புனரமைக்கும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தியும், 'கோவில் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்றவர்களுக்கு வழிபட மட்டுமே உரிமை உள்ளது என்றும்' கூறி வருகின்றனர். அதனால், பொதுவான நபர்களை உபயதாரர்களாக நியமித்து, புனரமைப்பு பணி மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
04-Mar-2025
07-Mar-2025