உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுங்க கட்டணம் உயர்த்தக்கூடாது என்பதைமத்திய அரசு கண்டுகொள்ளாதது வேதனை

சுங்க கட்டணம் உயர்த்தக்கூடாது என்பதைமத்திய அரசு கண்டுகொள்ளாதது வேதனை

'சுங்க கட்டணம் உயர்த்தக்கூடாது என்பதைமத்திய அரசு கண்டுகொள்ளாதது வேதனை'சேலம்:தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில், 40 சுங்கச்சாவடிகளில், நேற்று நள்ளிரவு முதல், 5 - 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணைய பரிந்துரைப்படி, இந்த கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. மீதி, 38 சுங்கச்சாவடிகளில், செப்., 1ல் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். லாரி உரிமையாளர்களுக்கு, இந்த கட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தி இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டீசல், உதிரி பாகங்கள் விலை, இன்சூரன்ஸ் கட்டண உயர்வால், மோட்டார் தொழில் நலிவடைந்து வருவதால், காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்றுவதோடு, சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் தன்ராஜ் கூறியதாவது:அரியலுார், திருச்சி, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட சென்னையை சுற்றியுள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சேலம் - டில்லி செல்லும் லாரிக்கு, 800 முதல், 1,000 ரூபாய், சேலம் வழியே சென்னை செல்லும் வாகனங்களுக்கு, 200 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. சுங்க கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளாதது வேதனை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை