வனப்பகுதியில் தீ விபத்தை தவிர்க்க ரோந்து பணி தீவிரம்
வனப்பகுதியில் தீ விபத்தை தவிர்க்க ரோந்து பணி தீவிரம்சேலம்:சேலம் வனக்கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, ஏற்காடு, டேனிஷ்பேட்டை உள்பட ஆறு வனச்சரகங்கள் உள்ளன. வனச்சரக பகுதிகளில், கோடை காலத்தையொட்டி தீ தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக தீ தடுப்பு ரோந்து பணியை தீவிரப்படுத்த வனச்சரக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிலும் மதியம், 1:00 முதல் மாலை, 5:00 மணி வரை கண்காணிப்பு அதிகமாக்கப்பட்டு உள்ளது.