உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீதிமன்ற உத்தரவை மீறி ஆக்கிரமிப்பு 21 வீடுகளை அகற்றிய வருவாய்த்துறை

நீதிமன்ற உத்தரவை மீறி ஆக்கிரமிப்பு 21 வீடுகளை அகற்றிய வருவாய்த்துறை

நீதிமன்ற உத்தரவை மீறி ஆக்கிரமிப்பு 21 வீடுகளை அகற்றிய வருவாய்த்துறைஆத்துார்: ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டி, தண்ணீர் பந்தல் பகுதியில், 1.82 ஏக்கர் நிலம், ஆதிதிராவிடர் நத்தம் என, கிராம கணக்கில் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு, 21 பேர் தகரம், அட்டை வீடுகளை கட்டினர். இந்த வீடுகளை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நேற்று, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆத்துார் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ஜெயலட்சுமி, தம்மம்பட்டி போலீசார் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்றனர். அப்போது குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின் வருவாய்த்துறையினர், 'நீதிமன்ற உத்தரவுப்படி, 21 வீடுகளும் அகற்ற வேண்டும்' என கூறி, போலீஸ் பாதுகாப்புடன் முழுமையாக அகற்றம் செய்தனர்.இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறியதாவது:கோனேரிப்பட்டி, தம்மம்பட்டியில், ஒருவருக்கு இரு இடங்களில் முறைகேடாக, 21 பேருக்கு பட்டா வழங்கியது தெரிந்தது. இதில் தம்மம்பட்டியில் வழங்கிய பட்டாவை, 2006ல் அப்போதைய டி.ஆர்.ஓ., ரத்து செய்தார். பின் புது பயனாளிகள், 21 பேருக்கு, பட்டா வழங்கப்பட்டது.ஆனால் ஏற்கனவே பட்டா பெற்றவர்கள், இடத்தை காலி செய்ய மறுத்து, வீடுகள் கட்டினர். புதிதாக பட்டா பெற்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அவர்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்டிக்கொள்ள அனுமதிக்கும்படி, 2023ல், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததால், ஆக்கிரமிப்பில் இருந்த, 21 குடியிருப்பு வீடுகள் அகற்றப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை