உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டுமான நிறுவன ஓனர் மாயம்

கட்டுமான நிறுவன ஓனர் மாயம்

கட்டுமான நிறுவன ஓனர் மாயம்சேலம்:சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 30. வெள்ளாளப்பட்டியில் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்துகிறார். நேற்று முன்தினம் காலை, மகளை பள்ளியில் விட அழைத்துச்சென்றவர், வீடு திரும்பவில்லை.அவரது மனைவி தனுஸ்ரீ தேடியபோது, வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே, வெங்கடேஷின் இருசக்கர வாகனம் மட்டும் இருந்தது. இதுகுறித்து தனுஸ்ரீ புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.செவிலியர்அதேபோல் செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மன் செட்டி சாலையை சேர்ந்தவர் சுரேஷ் மகள் இலக்கியா, 23. சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மருத்துவமனை சென்ற அவர், வீடு திரும்பவில்லை. அவரது தாய் உமா புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ