உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லஞ்சம் வாங்கிய தாசில்தார் சஸ்பெண்ட்

லஞ்சம் வாங்கிய தாசில்தார் சஸ்பெண்ட்

லஞ்சம் வாங்கிய தாசில்தார் 'சஸ்பெண்ட்'ஆத்துார், : சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தியாகனுாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 38. கெங்கவல்லி தாலுகா தாசில்தாராக பணிபுரிந்தார். இவர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற, தம்மம்பட்டியை சேர்ந்த மஞ்சுளாவிடம், 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.கடந்த, 29ல், முன்பணமாக, 10,000 வாங்கியபோது, பாலகிருஷ்ணனை, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அவர் மீது துறை நடவடிக்கை எடுக்க, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு, 30ல், அறிக்கை வழங்கினார். இதையடுத்து பாலகிருஷ்ணனை, 'சஸ்பெண்ட்' செய்து, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ