தொடரும் பைக் திருட்டால் காரிப்பட்டி மக்கள் கலக்கம்
தொடரும் பைக் திருட்டால் காரிப்பட்டி மக்கள் கலக்கம்காரிப்பட்டி:காரிப்பட்டி, நேரு நகரை சேர்ந்தவர் அஜித்குமார், 24. இவரது, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கை, இரவில் ஒரு மாதத்திற்கு முன் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அதேபோல் கருணாநிதி காலனியை சேர்ந்த ஜோதி கண்ணன், 27, வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த, 'டியோ' மொபட், கடந்த, 3 இரவில் திருடுபோனது. அன்று அதே காலனியில் தனுஷ், 23, வீடு முன், 'ஆர்15' பைக்கின் பூட்டை உடைத்து திருடி, சிறிது துாரம் கொண்டு சென்ற நிலையில், மேலும் தள்ளிச்செல்ல முடியாமல் விட்டுச்சென்றனர். கடந்த, 18 இரவு, நேரு நகரை சேர்ந்த பாலசுப்ரமணி, 41, வீடு முன் நிறுத்தியிருந்த, 'சைன்' பைக்கை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். மேலும், 3 பேரின் பைக்குளை திருட முயற்சி நடந்துள்ளது. இதில் கருணாநிதி காலனியில், 2 பேர் இரவில் பைக் திருடிய, 'சிசிடிவி' காட்சி பரவி வருகிறது. இதனால் மக்கள், வாகனங்களை வீடு முன் நிறுத்தி வைக்கவே அச்சப்படுவதால், காரிப்பட்டி போலீசார் உடனே நடவடிக்கை எடுத்து திருடர்களை கைது செய்ய வேண்டும்.