பூஜ்ஜிய கரிம வேளாண்மை குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
பூஜ்ஜிய கரிம வேளாண்மை குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி வகுப்புசேலம்:காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்க, வேளாண்மையில் பூஜ்ஜிய கரிம பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது.சேலம் வேளாண்மைத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணைந்து, நேற்று வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் தலைமையில், பூஜ்ஜிய கரிம வேளாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண்மை துணை இயக்குனர்கள் நீலாம்பாள், கண்ணன், கமலம், நாகராஜன், உதவி இயக்குனர் கவுதம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ரவி, ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பேராசியர் வீரமணி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறையில் இருந்து தலா, 25 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, 50 அங்கக விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர். அளவுக்கு அதிகமான கரிம வாயுக்களால், புவி வெப்பமடைந்து பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, அடிக்கடி இயற்கை பேரழிவு ஏற்படுகிறது.இதை தடுக்க வேளாண்மையில் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், கரும்பு, மக்காச்சோளம், சோளத்தட்டு கழிவுகளை தீ வைத்து எரிக்கக்கூடாது. விவசாயத்தில் கரிம பயன்பாட்டை பூஜ்ஜிய அளவுக்கு குறைக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.