பெரம்பலுார் கலெக்டரை கண்டித்துஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலுார் கலெக்டரை கண்டித்துஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்சேலம்,:தமிழக ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநில நிர்வாகிகளிடம் மோசமான அணுகுமுறையை கையாண்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட, பெரம்பலுார் கலெக்டரை கண்டித்து, தமிழகம் முழுதும் நேற்று போராட்டம் நடந்தது. சங்கம் சார்பில், அனைத்து வட்டார தலைநகரில், பணியை புறக்கணித்து ஒருமணி நேரம் வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது.அதன்படி சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி ஓய்வு சங்க மாவட்ட துணைத்தலைவர் விஜயன், ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார்.அதேபோல் ஆத்துாரில் மாவட்ட தலைவர் செந்தில், காடையாம்பட்டியில் மாவட்ட செயலர் ஜான், சேலம் வட்டத்தில் மாவட்ட பொருளாளர் வடிவேல் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், 19 வட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 533 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு ஆதரவாக, இன்று அரசு ஊழியர் சங்கத்தினர், தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.