ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்குநெடுஞ்சாலையில் நடைபாதை மேம்பாலம்
'ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்குநெடுஞ்சாலையில் நடைபாதை மேம்பாலம்'ஆத்துார்,:சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், 146 அடி உயரத்தில் சுவாமி சிலை உள்ளது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் சேலம் - உளுந்துார்பேட்டை நான்கு வழிச்சாலையை பக்தர்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் இரும்பு கம்பிகளால் உயர்மட்ட நடைபாதை பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இரு மாதங்களாக, சாலை இருபுறமும், கான்கிரீட் பில்லர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று, இரும்பு கம்பிகளால் ஆன நடைபாதை பாலத்தை, கான்கிரீட் இரும்பு பில்லர் மீது வைத்தனர். இதற்கு அந்த பாதையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டன. இதுகுறித்து, சேலம் - உளுந்துார்பேட்டை நான்கு வழிச்சாலை திட்ட இயக்குனர் வரதராஜ் கூறுகையில், ''முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதுகாப்பாக செல்லும்படி, சேலம் - உளுந்துார்பேட்டை நான்கு வழிச்சாலையில், 2.02 கோடி ரூபாயில் நடை பாதை உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர இருபுறமும் சர்வீஸ் சாலையும் உள்ளது,'' என்றார்.