உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு வி.ஏ.ஓ., வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஓய்வு வி.ஏ.ஓ., வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஓய்வு வி.ஏ.ஓ., வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைதுகெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, மண்மலை ஊராட்சி பாலக்காட்டை சேர்ந்த, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வேணுகோபால், 75. இவரது வீட்டில் இருந்த பெண்களிடம், கத்தியை காட்டி மிரட்டிய, 5 பேர், 20 பவுன் நகைகள், 10,000 ரூபாயை, கடந்த, 29ல் கொள்ளையடித்து சென்றனர். தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், 5 தனிப்படை அமைத்து விசாரித்ததில், இரு கார்களில் வந்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அதில் திருப்பூரை சேர்ந்த, கார் டிரைவர் ஆனந்தகுமார், 30, கார் அடமானத்தில் வாங்கிய சுபாஷ், 32, ஆகியோர், நேற்று திருப்பூரில் இருந்த நிலையில், போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், கொள்ளையில் ஈடுபட்ட மேலும் சிலர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ