சேலம் ஸ்ரீ பாரதி நர்சிங் ேஹாமில்25வது ஆண்டு வெள்ளி விழா
சேலம் ஸ்ரீ பாரதி நர்சிங் ேஹாமில்25வது ஆண்டு வெள்ளி விழாசேலம்:சேலம், அன்னதானப்பட்டியில் செயல்பட்டு வரும், ஸ்ரீ பாரதி நர்சிங் ஹோம் மக்கள் பேராதரவுடன் தனது, 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடியது.மதுரை அப்பல்லோ மருத்துவமனை, மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.கார்த்திக் குமரன் விழாவுக்கு தலைமை வகித்தார். டாக்டர் சி.பிரதிபா விழாவுக்கு வந்தவர்களை வரவேற்று பேசினார். மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பாரதி குத்துவிளக்கு ஏற்றினார், நிறுவனர் கே.ஆர்.எஸ்.சந்திரசேகரன், மருத்துவமனை குறித்து பேசினார்.உடுமலை டாக்டர் பி.கார்த்திக், டாக்டர் எம்.வெங்கடேசன், டாக்டர் எம்.கே.ராஜேந்திரன், டாக்டர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், டாக்டர் ஆர்.ராஜ்குமார், டாக்டர் எம்.தேன்மொழி மற்றும் சேலம் மாநகர தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமார் ஆகியோர் மற்றும் பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் சி.பவித்ரா நன்றி கூறினார்.