பள்ளி மாணவி கூட்டு பாலியல் விவகாரம்3 மாணவர் மீதும் வன்கொடுமை வழக்கு
பள்ளி மாணவி கூட்டு பாலியல் விவகாரம்3 மாணவர் மீதும் வன்கொடுமை வழக்குஆத்துார்:பள்ளி மாணவியை, கூட்டு பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில், பிளஸ் 1 மாணவர்கள், 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை, அதே பள்ளியில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள், 3 பேர், கூட்டு பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். ஆத்துார் மகளிர் போலீசார், 3 மாணவர்கள் மீதும், 'போக்சோ' வழக்குப்பதிந்து கைது செய்து, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.இத்தகவலை மறைத்ததாக, தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை பானுப்பிரியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, தி.மு.க.,வை சேர்ந்த, பள்ளியின் பி.டி.ஏ., தலைவர் ஜோதியிடம், தகவல் மறைத்தது, கட்டப்பஞ்சாயத்து செய்தது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒரு பிரிவை சேர்ந்தவர் என்பதாலும், வேறு பிரிவை சேர்ந்த மாணவர்கள், கூட்டு பாலியல் செய்துள்ளதும் தெரியவந்ததால், 3 மாணவர்கள் மீதும் நேற்று வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், ஆத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து, டி.எஸ்.பி., விசாரணை செய்வது தொடர்பாக, வழக்கு அறிக்கை, எஸ்.பி.,க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 'போக்சோ' வழக்குடன் தற்போது வன்கொடுமை வழக்கும் பதிவாகியுள்ளதால், டி.எஸ்.பி., தலைமையில் விசாரணை நடத்தி, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தயார் செய்து நீதிமன்றத்தில் வழங்கப்படும்' என்றனர்.