தனியார் வேலை தேடுபவரா? 8ல் தேவியாக்குறிச்சி வாங்க...
தனியார் வேலை தேடுபவரா? 8ல் தேவியாக்குறிச்சி வாங்க...சேலம்:சேலம் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, தனியார் வேலைவாய்ப்பு முகாமை, வரும், 8ல், தேவியாக்குறிச்சி, தாகூர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடத்த உள்ளது. அதில், 200க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்கள், 20,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. காலை, 8:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ள முகாமில், அனைத்து வித கல்வி தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். விரும்பும் நிறுவனங்கள், வேலை தேடுபவர், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விபரம் பெற, 0427 - 2401750 என்ற எண்ணில் அழைக்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.