எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
ஓமலுார்: சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் இடையே, எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்-புணர்வு ஏற்படுத்தும்படி, ஆக., 12 முதல், அக்., 12 வரை, மாவட்டம் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ஓமலுார் அரசு மருத்துவமனை, பெரியார் பல்கலை இணைந்து, நேற்று, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்-தின. பல்கலை வளாகம் முன், துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் மனித சங்கிலியாக நின்றார். தொடர்ந்து விழிப்புணர்வு ஆட்டோக்களை, கொடிய-சைத்து தொடங்கி வைத்தார்.பல்கலை வளாகம், ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன. இதில் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஹெலன்குமார், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்-பாடு அலுவலர் அருணாசலம், ஓமலுார் அரசு மருத்துவமனை ஆலோசகர் கவிதா, எச்.ஐ.வி., தடுப்பு பிரிவில் பணிபுரியும் தொண்டு நிறுவனத்தினர், பல்கலையை சேர்ந்த, 500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.