வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
சேலம்: தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியை சேர்ந்த ஜெயபால் மனைவி வெண்ணிலா. இவருக்கு, 2022ல், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த தண்டபாணி மூலம் சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த விஜய லட்சுமணன் என்பவர் அறிமு-கமானார்.வெண்ணிலாவிடம், 'அரசு வேலை வாங்கி தருகிறேன்' என, விஜ-யலட்சுமணன் கூறினார். அதை நம்பிய வெண்ணிலா, 2022 மார்ச் முதல், பல தவணையாக, 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. பின் விஜயலட்சுமணன், 14.85 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். மீதி, 10.15 லட்சம் ரூபாயை வழங்காமல் ஏமாற்றி வந்தார். இதனால் வெண்-ணிலா புகார்படி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று, விஜயலட்சுமணன், தண்டபாணி மீது வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.