மேலும் செய்திகள்
சினை பிடிக்காத மாடுகள் முகாம் நடத்த வலியுறுத்தல்
12-Oct-2026
திருட்டு வழக்கில் மாயமானவர் கைது
12-Oct-2026
நீலமான், பொன்னிற நரி பார்வையிட அனுமதி
12-Oct-2026
தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்
12-Oct-2026
ஓமலுார் : ஓமலுார், கோட்டை, சரபங்கா ஆற்றங்கரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அபிதகுஜாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் கோவில் உள்ளது. அதன் சுற்று பிரகாரம், தரைத்தளம் ஆகியவற்றை, சரபங்கா முனிவர் அறக்கட்டளை சார்பில் புனரமைப்பு பணி நடந்தது. வரும், 22 காலை, 9:15 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. இதனால் நேற்று காலை ஓமலுார் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலம், மேள தாளம் முழங்க, கோட்டையில் உள்ள கோவில் வரை ஊர்வலமாக சென்றது. அதில் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடங்களை சுமந்து சென்றனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் விநாயகர் பூஜை, சங்கல்பம் முதல்கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மூன்றாம் கால யாக பூஜை, சிறுவர்கள் கலைநிகழ்ச்சி, சிறப்பு பட்டிமன்றம், நாளை காலை, 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கும்பாபி ேஷகம் நடக்கிறது.
12-Oct-2026
12-Oct-2026
12-Oct-2026
12-Oct-2026