மேலும் செய்திகள்
29ல் முன்னாள் மாணவர் சந்திப்பு
19-Dec-2024
பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை, கட்டபுளியமரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து பள்ளி மாணவர்கள் வேட்டி, சட்டை, மாணவியர் பாவாடை, சட்டை அணிந்து, கையில் கரும்புகளை ஏந்தி பள்ளியை நோக்கி புறப்பட்டனர். அவர்களுக்கு முன், பள்ளி மேலாண் குழு பெண்கள் ஒரே சீருடையில், பொங்கல் சீர் வரிசை தட்டை ஏந்திச்சென்றனர். இந்த ஊர்வலம் மேள தாளம் முழங்க, பள்ளியை அடைந்தது. அங்கு, சமத்துவ பொங்கல் வைக்கும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட்டனர். மதியம் பெற்றோர், பள்ளி மாணவ, மாணவியர், மக்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியருக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, பள்ளி சார்பில் தயாரிக்கப்பட்ட தினசரி காலண்டர் வழங்கினர். பொங்கல் வழிபாடு நடத்தி, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் தெய்வநாயகம், தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மக்கள் பங்கேற்றனர்.
19-Dec-2024