மேலும் செய்திகள்
3 கடைகள் பூட்டு உடைப்பு
06-Jan-2025
விபத்தில் படுகாயம்அடைந்த மாணவி பலிதலைவாசல் : தலைவாசல், மும்முடியை சேர்ந்த, கோபி மகள் யுவந்திகா, 19. சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்தார். ஆத்துார், பழைய பேட்டையைச் சேர்ந்தவர்கள் மகேஸ்வரி, 48, முத்துலட்சுமி, 35, ஜெயந்தி, 40, சுகனேஸ்வரி, 69. இவர்கள், 5 பேரும், கடந்த, 12ல், மும்முடி பஸ் ஸ்டாப்பில் இருந்து சாலையை கடக்க முயன்றனர்.அப்போது, காங்கேயத்தில் இருந்து சென்னைக்கு, கோழி ஏற்றி சென்ற மினி லாரி மோதியதில், 5 பேரும் காயமடைந்தனர்.அதில் சுகனேஸ்வரி, அதே நாளில் ஆத்துார் அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட, மாணவி யுவந்திகா நேற்று உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Jan-2025