உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பசுமை ஏற்காடு திட்டம்கலெக்டர் அறிவுரை

பசுமை ஏற்காடு திட்டம்கலெக்டர் அறிவுரை

ஏற்காடு, :ஏற்காடு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், 'பசுமை ஏற்காடு' திட்டம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் ஏற்காட்டை மேம்படுத்தவும், பிளாஸ்டிக் தடை குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:ஏற்காட்டில் கட்டப்படும் கட்டடங்களுக்கு ஆன்லைனில் மட்டும் அனுமதி பெற வேண்டும். விதிமீறி கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையை அகற்ற, சுற்றுலா தலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தித்தரப்படும். அதற்கு பின், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்களில் வரும் குடிநீர், குளிர்பானங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மக்கள், விடுதி உரிமையாளர், ஓட்டல் நடத்துவோர் உள்ளிட்டோர், உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பி.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், வணிகர்கள், உணவக உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை